Friday, June 26, 2020

கால்நடைகளுக்கான கோடைக்கால பராமரிப்பு முறைகள்!!


கோடைக்காலத்தில் பொதுவாகவே கால்நடைகளுக்கு உயர்ந்த வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் ஒருங்கிணைந்த விளைவு காரணமாக உடலின் உடற் செயலியல் மாற்றம் ஏற்பட்டு வெப்ப அயர்ச்சி ஏற்படுகிறது.

குறிப்பாக, ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதங்களில் வெப்ப அயர்ச்சியினால் கால்நடைகளில் உற்பத்தி திறன் மற்றும் செயல் திறன் வெகுவாக பாதிப்பு ஏற்பட்டு கால்நடைகளின் பொதுச் சுகாதாரம் மட்டுமல்லாமல் வேளாண் பெருமக்களின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது.


கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகள்

  • உஷ்ணம் காரணமாக கால்நடைகளில் இனப்பெருக்க திறன் பாதிக்கப்படும்

  • ஆடு மாடுகளில் பால் சுரக்கும் உற்பத்தித் திறன் பாதிக்கப்படும்

  • உட்புறசெயலியல் மாற்றம் ஏற்பட்டு செயல் திறன் வெகுவாக பாதிக்கப்படும்

  • வளர்சிதை மாற்ற நோய்களின் தாக்கத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்

  • கால்நடைகளில் நோய் எதிர்ப்புத் திறன் பாதிக்கப்படும்.


தீவன பராமரிப்பு மற்றும் பொது மேலாண்மை யுக்திகளைப் பயன்படுத்துவதன் மூலம் கால்நடைகளுக்கு ஏற்படும் வெப்ப அயர்ச்சியிலிருந்து பாதுகாக்க முடியும், மேலும் தீவன உட்கொள்ளும் திறன் மற்றும் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்த முடியும்



கால்நடை பராமரிப்பு முறைகள்

  • பசுந்தீவனம் மற்றும் 35 சதவிகிதம் புரதச்சத்து நிறைந்த சமச்சீர் தீவனத்தினை காலை மற்றும் மாலை நேரங்களில் அளிக்கலாம்

  • பொட்டாசியம் நிறைந்த தாது உப்புகள் அளிப்பதன் மூலம் கறவை மாடுகளில் பால் உற்பத்தி மற்றும் இனப்பெருக்க திறனையும் மேம்படுத்த முடியும்

  • வெயில் காலங்களில், ஒரு நாளில் 5-6 முறை சுத்தமான மற்றும் குளிர்ந்த நீரை வழங்கலாம்

  • குறைந்தபட்சம் 9 அடி உயரமுள்ள கொட்டகை அமைத்து கொட்டகையைச் சுற்றி தீவன மரங்களை வைக்கலாம்

  • 20% துளையிடும் வேளாண் வலைகளும் பயன்படுத்தலாம்

  • 10 முதல் 30 நிமிடங்கள் இடைவெளியில் 1 முதல் 5 நிமிடங்கள் வரை கால்நடைகளின் உடலில் நேரடியாகத் தண்ணீரை தெளிப்பதன் மூலம் வெப்ப அயர்ச்சியைக் குறைக்க முடியும்

  • காற்றோட்டமான கொட்டகைகளிலோ அல்லது பயனுள்ள மற்றும் ஆதாரம் தரும் மரங்களின் நிழல்களில் கறவை மாடுகள் மற்றும் ஆடுகளைப் பராமரிக்கலாம்

  • காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதை தவிர்க்கவும். அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும்

  • அடர்தீவனங்களை 20-30 நிமிடங்கள் சம அளவு தண்ணீரில் ஊறவைத்து அளிக்க வேண்டும

  • வெயில் காலங்களில் மேய்ச்சல் நிலங்களில் ஒட்டுண்ணி அதிகரித்து கால்நடைகளில் உண்ணிக் காய்ச்சல் ஏற்படுத்தும். எனவே , உண்ணி நீக்க மருந்தினை பயன்படுத்தி உண்ணி தாக்கத்தில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க வேண்டும்

  • வெப்ப அயர்ச்சியினால் வளர்சிதை மாற்ற நோய்கள் பாதிப்பு ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால் தாது உப்புகள் மற்றும் சினை மாடுகளில் சிறந்த தீவன மேலாண்மை முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்

மருத்துவர் இரா. சங்கமேஸ்வரன் .
உதவிப் பேராசிரியர்,
கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் திருநெல்வேலி

 

No comments:

Post a Comment

add-15

<!--Begin: Star-Clicks.com HTML Code--><script type='text/javascript' src='https://www.star-clicks.com/secure/ads.php?p...