Sunday, June 28, 2020

ஆடிப்பட்டத்தில் விதைக்க ஏற்ற பொன்னாங்கண்ணி கீரை சாகுபடி!!


கீரைத்தோட்டம் என்பது விவசாய நிலத்தில் மட்டும் தான் பயிர் செய்ய வேண்டும் என்பது இல்லை. நம் வீட்டுத்தோட்டத்தில் கூட கீரை சாகுபடி செய்யலாம். இதற்கு அதிக தண்ணீர் தேவையில்லை. கிணற்று தண்ணீர் கொண்டு கூட நாம் கீரையைப் பயிடலாம்.

பொன்னாங்கண்ணி சாகுபடி முறை 

சிறிய வடிவிலான இலைகளைக் கொண்ட பொன்னாங்கண்ணிக் கீரை தரையோடு படர்ந்து வளரும்.

பொன்னாங்கண்ணி கீரையானது இந்தியா முழுவதும் காணப்படும் படர் பூண்டு வகையைச் சேர்ந்தது. இதனை அறுத்துவிட்டால்,மீண்டும் மீணடும் துளிர்க்கும் தன்மையே இதன் சிறப்பு. எனவே வீட்டில் எளிதாக இதனை வளர்க்க முடிகிறது.

வகைகள்

சீமை பொன்னாங்கண்ணி
நாட்டுப் பொன்னாங்கண்ணி

பயிர் செய்ய ஏற்ற பருவம்

இதனை வருடம் முழுவதும் பயிர் செய்யலாம். எனினும், சித்திரை, ஆடி, மார்கழி, மாசி ஆகியவை ஏற்ற பருவங்கள் ஆகும்.  

மண்

நல்ல மண்ணுடன் மணல் கலந்து சிறிது அமிலத்தன்மை கொண்ட இருமண் நிலம், செம்மண் நிலம் ஆகியவை பொன்னாங்கண்ணி கீரை சாகுபடிக்கு உகந்தவை.

நிலம் தயாரித்தல்

முதலில் நிலத்தை இரண்டு மூன்று முறை உழவு செய்ய வேண்டும். பின்னர் நிலத்திற்கு தேவையான உரத்தை பரவலாகக் கொட்டி உழவு செய்து நிலத்தைப் பயன்படுத்த வேண்டும். பிறகு தேவையான அளவுக்கு பாத்திகள் அமைப்பது நல்லவது



விதைத்தல்

விதைகள் சிறியதாக இருப்பதால், அதனுடன் மணல் கலந்து பாத்திகளில் தூவி விட வேண்டும். பின்னர் கையால் கிளறி மெல்லிய போர்வை போல் அமைத்து பாசனம் செய்ய வேண்டும்.

தண்ணீர்

விதைகள் விதைத்தவுடன் நீர் பாய்ச்சுவது சிறந்தது. விதைத்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சுவது அவசியம். பின்னர் நான்கு நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.

உரமிடுதல்

மாதத்திற்கு இரண்டு முறை ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்து விட வேண்டும். பத்து லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி கரைசல் போதுமானது. இதனால், கீரைகளின் வளர்ச்சி ஒரே மாதிரி சீராக இருக்கும்.

ஊரடங்கை பயனுள்ளதாக மாற்ற பயன்படும் மாடித்தோட்டம்!!

பாதுகாக்கும் முறைகள்

களைகளைக் களைதல்

விதைத்த ஏழு நாட்களிலேயே விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். எனவே பத்து முதல் பதினைந்து நாட்கள் கழித்து, களை எடுக்க வேண்டும். பயிரின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, அதிகப்படியான பயிர்களை களை எடுக்க வேண்டியது மிக மிக அவசியம்.

பூச்சி தாக்குதல்

பூச்சிகளின் தாக்குதல் ஏற்பட்டால், அதில் இருந்து கீரைச் செடிகளைக் காப்பாற்ற, நொச்சி, பிரண்டை, சோற்றுக்கற்றாழை ஆகிய மூன்றரையும், சம்மாக எடுத்து அரைத்து, ஒரு லிட்டர் மாட்டு சிறுநீரில், கலந்து ஒரு நாள் வைத்திருக்க வேண்டும். பின்னர், பத்து லிட்டர், தண்ணீருக்கு 300 மில்லி லிட்டர் கரைசல் என்ற விகிதாச்சாரத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை

பொன்னாங்கண்ணிக் கீரையை 5 சென்டி மீட்டர் உயரம் வரை வளரவிட்டு அறுவடை செய்வது சிறந்தது. அறுவடைக்கு குறிப்பிட்ட இடைவெளியைக் கடைப்பிடிப்பது நல்ல மகசூலைத் தரும்.



நன்மைகள்

பொன்னாங்கண்ணி கீரையில், புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சுத்துக்கள் மற்றும் வைட்டமின் சி (Vitamin C ) நிறைந்திருப்பதால் உடலுக்கு குளிர்ச்சியைத் தர வல்லது.
கண் எரிச்சல், கண் மங்கல், கண் கட்டி, கண்ணில் நீர் வடிதல் போன்ற கண்நோய்களைக் குணமாக்கும் வல்லமை படைத்தது. பொன்னாங்கண்ணிக் கீரையை தொடர்ந்து ஒருவாரம் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை நன்றாகத் தெரியும்.
இந்த கீரையுடன் மிளகும், உப்பும் கலந்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறையும்.

வேளாண் நிலங்களில் மரங்கள் நடும்போது கவனிக்க வேண்டியவை!!

இதில் கால்சியம் அதிகளவில் இருப்பதால், எலும்புகளின் உறுதிக்கும், பற்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.பொன்னாங்கண்ணி கீரையுடன் பூண்டு, வெங்காயம், சீரகம் சேர்ந்து வதக்கி தொடர்ச்சியாக சாப்பிட்ட வந்தால், மூல நோய் படிப்படியாக குணமாகும்.

பொன்னாங்கண்ணி கீரைச் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி தைலமாகப் பயன்படுத்தினால் கூந்தல் நன்றாக வளரும். இவ்வளவு நன்மை தரும் பொன்னாங்கண்ணிக் கீரையை நாமும் உணவில் சேர்த்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.

No comments:

Post a Comment

add-15

<!--Begin: Star-Clicks.com HTML Code--><script type='text/javascript' src='https://www.star-clicks.com/secure/ads.php?p...