மாடித்தோட்டம் உருவாக்கும் முறைகள் மற்றும் பயன்கள்
ஒவ்வொருவரும் தன்னால் முடிந்தவரை வீட்டு தோட்டங்களில் காய்கறி,கீரைகள்,பூச்செடிகளை வளர்த்தால் தன்னுடைய குடும்பத்தின் தேவைகளை ஓரளவு பூர்த்திசெய்ய முடியும். இதெல்லாம் கிராமங்களுக்குத்தான் சரிப்படும், நகரத்தில் வாழ்பவர்களுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது என்றுதான் எல்லோரும் நினைக்கின்றனர். ஆனால் மும்பையில் குடிசை பகுதிகளில் தொட்டிகளை வைக்க இடமில்லை என்றாலும் அவற்றை கயிற்றில் கட்டி கூரையின் பக்கவாட்டில் உள்ள கம்புகளில் தொங்கவிட்டு வளர்க்கிறார்கள்.
அபார்ட்மெண்டில் குடியிருப்பவர்கள் மொட்டைமாடியில் தோட்டம் அமைத்து உழைப்பையும் செலவுகளையும் பகிர்ந்துகொண்டால் பூச்சிக்கொல்லிகள் மற்றும் நச்சுக்கள் கலக்காத காய்கறிகள் கிடைக்கும் அல்லவா? செடிகளுக்கு தண்ணீர் போற்றுவதும், அதை பராமரிப்பதும் அவர்களுக்கு நல்ல பொழுதுபோக்காகவும் நல்ல உடற்பயிற்சியாகவும் இருக்கும். அழகாக போது குலுங்கும் தோட்டத்தையும் அதில் விளையாட வரும் அணில்கள் மற்றும் குருவிகளும் யாருக்குத்தான் பிடிக்காது.
மாடித்தோட்டம் உருவாக்கும் முறைகள்:
பால்கனிகளில், மொட்டைமாடிகளில், ஜன்னல் விளிம்புகளில் கூட தொட்டிகளை வைத்து செடிகளை வளர்க்கலாம். சில இடங்களில் ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளின் மேலும் ரோஜா செடிகளை வளர்ப்பதுண்டு. மாடிகளில் வளர்ப்பதற்கு ஏற்றவாறு ஓவல் அமைப்புள்ள தொட்டிகளும் கிடைக்கிறது.
நல்ல விளைச்சலை பெற வேண்டுமானால் முதலில் மண் ஆரோகியதுடன் இருக்க வேண்டும். செடிகள் தங்களுக்கு தேவையான சத்துக்களை மண்ணிலிருந்து மீதியை காற்றிலிருந்து பெற்று கொள்கிறது. அதனால் மண்ணும் சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும்.
செம்மண்ணும் மணலும் கலந்த கலவையோடு எலும்புத்தூள், சுண்ணாம்புத்தூள், வேப்பம்புண்ணாக்கு கலந்த கலவையை தொட்டிகளில் இட வேண்டும்.
ஒவ்வொரு விதையும் விதைப்பதற்கு முன்பு சில வழிமுறைகளை பயன்படுத்தவேண்டும். வெண்டை விதையை வெள்ளை துணியில் கட்டி அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து எடுத்து அப்படியே மூன்று நாட்கள் வைத்துவிட்டால் முளை வந்துவிடும். அதைத்தான் தொட்டியில் நட வேண்டும். காலை நேரத்தில் விதைப்பது நல்லது.
No comments:
Post a Comment