Wednesday, June 3, 2020

பப்பாளி சாகுபடி மற்றும் மருத்துவ பயன்கள்

பப்பாளி சாகுபடி மற்றும் மருத்துவ பயன்கள்


பப்பாளி ஒரு பழம் தரும் மரமாகும். இதற்கு பறங்கிப்பழம் என்று மற்றொரு பெயரும் உள்ளது.

பப்பாளியின் தாயகம் மெக்சிக்கோவாகும். தற்போது மேற்கிந்தியத் தீவுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா முதலான நாடுகளில் பப்பாளி அதிகமாக விளைகிறது.

எப்படி பயிரிடுவது…?
  • கோ.1, கோ.2, கோ.3, கோ.4, கோ.5, கோ.6, கோ.7, கூர்க்கனிடியூ மற்றும் சூரியா ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
  • வருடம் முழுவதும் பயிர் செய்யலாம். இருந்தாலும் ஜீன் முதல் செப்டம்பர் வரை உள்ள காலங்கள் நடவிற்கு மிகவும் ஏற்றது. நடவுப் பருவத்தில் அதிக மழை இல்லாமல் இருப்பது நல்லது.
  • பப்பாளிப் பயிர் பலவகைப்பட்ட மண்ணிலும் வளரக்கூடியது. எனினும் களிமண் பூமி சாகுபடி செய்ய ஏற்றதல்ல.
  • ஒரு எக்டருக்கு நடவு செய்ய 500 கிராம் விதைகள் தேவைப்படும்.
  • நேர்த்தி செய்த விதைகளை தொழு உரம் மற்றும் மண் நிரப்பிய பாலித்தீன் பைகளில் ஒரு செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும். ஒரு பாலித்தீன் பையில் நான்கு விதைகள் வரை விதைக்கலாம். பிறகு பைகளை நிழல்படும் இடத்தில் வைத்து பூவாளி கொண்டு தண்ணீர் ஊற்றவேண்டும். நாற்றுக்கள் 60 நாட்களில் நடவுக்குத் தயாராகிவிடும்.
  • நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது சமன் செய்ய வேண்டும். பிறகு 1.8 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீ நீளம், 45 செ.மீ அகலம் மற்றும் 45 செ.மீ ஆழத்தில் குழிகள் எடுக்கவேண்டும். குழிகளில் மண் மற்றும் தொழு உரம் இட்டு நீர் ஊற்றி ஆற விட வேண்டும்.
  • தயார் செய்துள்ள குழிகளில் நாற்றுகளை மையப்பகுதியில் நட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
  • நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின் வாரம் ஒரு முறை நீர்ப் பாய்ச்சினால் போதுமானது. செடிகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
  • நடவு செய்த 20-ம் நாளில் களை எடுத்து, ஒரு ஏக்கருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் அடங்கிய 150 கிலோ உரத்தை கொடுக்க வேண்டும்.
  • நட்ட 20 நாட்களில் களை எடுக்க வேண்டும். செடிகளைச் சுற்றி களை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். களை எடுத்தப் பின் மண் அணைத்து நீர் பாய்ச்ச வேண்டும்.
  • நன்கு திரண்ட பழங்களின் தோல் சற்றே மஞ்சள் நிறமாக மாறும் போது அறுவடை செய்யவேண்டும்.
  • மகசூலானது இரகங்களை பொறுத்து வேறுபடும். கோ.2 இரகமாக இருந்தால் எக்டருக்கு 250 டன்களும், கோ. 3 இரகத்தில் 120 டன்களும், கோ.5 இரகத்தில் 250 டன்களும், கோ.8 இரகத்தில் 160 டன்களும், கோ.7 இரகத்தில் 225 டன்களும் மகசூல் கிடைக்கும்.
பயன்கள்
  • பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும்.
  • பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் குணமடையும்.
  • பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். நல்ல பலன் கிடைக்கும்.
  • பப்பாளிக்காயை சாறு அரைத்துக்குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும்.
  • பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் தடவினால் வலி, விஷம் இறங்கும்.
  • அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
  • அடிக்கடி பப்பாளி பழத்தினை சாப்பிடுபவர்களுக்கு நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் இதனை சாப்பிடுபவர்களுக்கு நோய் தாக்குதல் குறைவு.

No comments:

Post a Comment

add-15

<!--Begin: Star-Clicks.com HTML Code--><script type='text/javascript' src='https://www.star-clicks.com/secure/ads.php?p...